ADDED : மார் 09, 2024 07:18 AM

ஊட்டி : ஊட்டியில், அரசு மருத்துவ கல்லார் மருத்துவமனை மற்றும் உடற்கூறியியல் துறை சார்பில், தன்னார்வ முழு உடல் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சேரிங்கிராஸ் பகுதியில் துவங்கிய பேரணியை, கலெக்டர் அருணா துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது.
மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், 'உடல் தானம் குறித்த தவறான எண்ணங்களை அகற்றி, அதன் முக்கியத்துவம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்க வேண்டும். இந்த முயற்சி, தனி நபர்கள் அவர்கள் இறந்த பிறகு, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக தங்கள் உடல்களை தானம் செய்யும் நோக்கத்தை ஊக்குவிப்பதாகும்.
உடல் தானம், ஒரு உன்னதமான மற்றும் தன்னலமற்ற பங்களிப்பு. மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும், மருத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதிலும், மருத்துவத்தில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும், எதிர்கால மருத்துவர்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவ கல்லுாரி உடல் தானம் பிரிவு நிர்வாகத்தை அணுகி, உடல் தானம் செய்யலாம்,' என்றனர்.
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, உடற்கூறியல் துறை தலைவர் சாவித்திரி உட்பட, மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.

