/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊட்டியில் போலீசார் மோப்ப நாயுடன் சோதனை
/
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊட்டியில் போலீசார் மோப்ப நாயுடன் சோதனை
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊட்டியில் போலீசார் மோப்ப நாயுடன் சோதனை
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊட்டியில் போலீசார் மோப்ப நாயுடன் சோதனை
ADDED : செப் 24, 2024 11:49 PM

ஊட்டி : ஊட்டியில், பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் தனியார் ஆங்கில பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 276 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் படிக்கின்றனர்.
நேற்று காலை, 8:00 மணிக்கு பள்ளிக்கு இ--மெயில் தகவல் வந்துள்ளது. அதில், பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
எஸ்.பி., நிஷா உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி., சவுந்தரராஜன், ஊட்டி பி1 இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தனியார் பள்ளிக்கு மோப்ப நாயுடன் வந்து ஒரு மணிநேரம் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை; புரளி என தெரியவந்தது.
ஏ.டி.எஸ்.பி., சவுந்திரராஜன் கூறுகையில், ''தனியார் பள்ளிக்கு இ - மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, சோதனை மேற்கொண்டதில் புரளி என, தெரியவந்துள்ளது.
பள்ளி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட்டு வருகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்தோம். மர்மநபர்கள் நடமாட்டம் இல்லை. பதட்டப்பட வேண்டாம். விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.