/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லை சோதனைச்சாவடி வாகன சோதனை தீவிரம்
/
எல்லை சோதனைச்சாவடி வாகன சோதனை தீவிரம்
ADDED : செப் 07, 2025 09:04 PM

பந்தலுார்; ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக வாகனங்கள் அதிகரித்துள்ள நிலையில், மாநில எல்லை சோதனை சாவடிகளில் வெளிமாநில வாகனங்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
கேரளா மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஓணம் பண்டிகை களை கட்டி உள்ளது. ஓணம் பண்டிகையை அனைத்து தரப்பினரும் கொண்டாடி வரும் நிலையில், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கேரளா மாநிலத்திற்கு போதை பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், வயநாடு முத்தங்கா சோதனை சாவடியில் உள்ளூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து, தமிழக -கேரளா எல்லையில் உள்ள பாட்டவயல் சோதனை சாவடி வழியாக தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும், போலீசாரின் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.