/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லை சாலைக்கு விமோசனம்: ரூ. 7.5 கோடியில் சீரமைப்பு
/
எல்லை சாலைக்கு விமோசனம்: ரூ. 7.5 கோடியில் சீரமைப்பு
எல்லை சாலைக்கு விமோசனம்: ரூ. 7.5 கோடியில் சீரமைப்பு
எல்லை சாலைக்கு விமோசனம்: ரூ. 7.5 கோடியில் சீரமைப்பு
ADDED : நவ 04, 2025 08:50 PM

கூடலுார்: - தமிழக -- கேரளா எல்லையான, கீழ்நாடுகாணி சாலை சீரமைப்பு பணி துவங்கியதால் ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர், கோழிக்கோடு சாலை, நாடுகாணியிலிருந்து, கேரளாவுக்கு நிலம்பூர் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை, தமிழக -- கேரளா, - கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழிதடமாக உள்ளது.
கேரளா சுற்றுலா பயணியர் இந்த வழியாக நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வந்து செல்கின்றனர். கேரளாவிலிருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, நாடுகாணி சோதனைச்சாவடியில் நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.
தமிழக -- கேரளா எல்லையான கீழ்நாடுகாணி முதல், நாடுகாணி வரை சேதமடைந்த சாலை சீரமைக்காததால், சுற்றுலா பயணியர், ஓட்டுனர்கள் அதிருப்தியுடன் வாகனங்கள் இயக்கி வந்தனர்.
இந்நிலையில், சேதமடைந்த, 4 கி.மீ., சாலை, 6.25 கோடி ரூபாயில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. பணிகளை கோட்டப் பொறியாளர் குழந்தை ராஜ், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தனர்.
கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறுகையில், 'கூடலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் செம்பாலா வரை ஒரு கி.மீ., தூரம், நாடுகாணி முதல் மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரை 4 கி.மீ., சாலை, 7.5 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது' என் றார்.

