/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊராட்சி கழிப்பறை சுகாதார சீர்கேடு
/
ஊராட்சி கழிப்பறை சுகாதார சீர்கேடு
ADDED : நவ 04, 2025 08:51 PM
பந்தலூர்: ஊராட்சி அலுவலக கழிப்பிடம் அவல நிலையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
பந்தலூர் அருகே, நெலாக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
கழிவறை சுத்தம் செய்யாமல், கடும் துர்நாற்றத்துடன் காணப்படுவதுடன், சுகாதாரத்தையும் பாதிக்கச் செய்யும் வகையில் உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'ஊராட்சி அலுவலக கழிவறையே இந்த நிலையில் இருந்தால், பொதுமக்கள் பயன்படுத்தும் பொது கழிவறைகளை எப்படி சீரமைப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சுகாதாரத்தை பாதிக்க செய்யும், கழிவறையை பராமரித்து பொதுமக்கள், அலுவலர்கள் பயன்படுத்த ஏதுவாக சுத்தம் செய்ய வேண்டும்.' என்றனர்.

