/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் படுகாயம்
/
தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் படுகாயம்
ADDED : மே 14, 2025 10:48 PM
பாலக்காடு, ;பாலக்காடு அருகே, தெருநாய்கள் கடித்ததில், படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கேரள மாநிலம், பாலக்காடு மருதரோடு ஊராட்சிக்குட்பட்ட கல்மண்டபம் பகுதியைச் சேர்ந்த, ஆட்டோ டிரைவர் அன்வரின் மகன் முகமது ஷியால், 8. அருகில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், சிறுவன் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் பக்கம் விளையாடிக் கொண்டிருந்தன். அப்போது, கூட்டமாக ஓடிவந்த நான்கு தெருநாய்கள் சிறுவனை கடித்தன.
சிறுவனின் அலறல் சப்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் கூச்சலிட்டதும் தெருநாய்கள் ஓடி விட்டன. நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த சிறுவனை, அப்பகுதி மக்கள் மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஹோட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகள் கொட்டிச் செல்வதால் பகுதியில் தெருநாய்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது. இறைச்சிக்கழிவு கொட்டுவதை தடுக்க, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.