தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பஸ் ஸ்டாண்டில் 'பிரெய்லி' வரைப்படம்: பார்வை மாற்று திறனாளிகள் பயன்

பஸ் ஸ்டாண்டில் 'பிரெய்லி' வரைப்படம்: பார்வை மாற்று திறனாளிகள் பயன்

பஸ் ஸ்டாண்டில் 'பிரெய்லி' வரைப்படம்: பார்வை மாற்று திறனாளிகள் பயன்


UPDATED : அக் 07, 2026 06:23 PM

ADDED : அக் 07, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 06:23 PM ADDED : அக் 07, 2026 06:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி பஸ் ஸ்டாண்டில் பார்வை மாற்று திறனாளிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தின் அமைப்பை தொடு உணர்வின் வாயிலாக தொட்டு பார்த்து புரிந்து கொள்வதற்காக 'பிரெய்லி' வரைபடம் அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமாக உள்ள ஊட்டிக்கு சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அதில், பார்வை மாற்று திறனாளிகளும் வருகை தருகின்றனர். அவர்கள், ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து, தமிழகம் உட்பட கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக, பஸ் ஸ்டாண்ட் மையப்பகுதியில் பிரெய்லி வரைபடம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வரைப்படத்தில் உள்ள இடங்களின் பெயர்கள், திசைகள் மற்றும் வழிகாட்டி குறிப்புகள் அனைத்தும் பார்வை மாற்று திறனாளிகள் வாசிக்கக்கூடிய 'பிரெய்லி புள்ளி' எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெய்சங்கர் கூறுகையில்,''ஊட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் பார்வை மாற்று திறனாளிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தின் அமைப்பு, புவியியல் கூறுகளை தொடு உணர்வின் வாயிலாக தொட்டுப் பார்த்து புரிந்து கொள்வதற்காக இந்த பிரெய்லி வரைபடம் அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us