/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துாய்மை பணியாளர்களுக்கான காலை உணவு; நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு

ADDED : ஜன 01, 2026 06:25 AM

கூடலுார்: கூடலுார் நகராட்சியில் துாய்மை பணியாளர்களுக்கு, வழங்கப்படும் காலை உணவு குறித்து, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ராஜாராம் ஆய்வு செய்தார்.
கூடலுார் நகராட்சி சார்பில், துாய்மை பணியாளர்களுக்கு சோதனை முறையில் சில நாட்களாக காலையில் உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 'நேற்று முன்தினம் பணியாளர்களுக்கு காலை உணவாக வழங்கப்பட்ட ரவா உப்புமா சரியாக வேகவில்லை,' என, கூறி துாய்மை பணியாளர்கள் அதனை உண்ணவில்லை என்ற புகார் எழுந்தது.
கூடலுார் நகராட்சி கமிஷனர் சக்திவேல் கூறுகையில்,''துாய்மை பணியாளர்களுக்கு, சோதனை முறையில் காலை தரமான உணவு வழங்கப்படுகிறது.
இப்பகுதியின் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக உணவு சற்று கடினமாக இருந்திருக்கலாம். இப்பகுதி காலநிலையை கருத்தில் கொண்டு, கலவை சாப்பாடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
இந்நிலையில், திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ராஜாராம் நேற்று, கூடலுார் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சமையல் அறை, துாய்மை பணியாளர்களுக்கு வழங்குவதற்காக சமைக்கப்பட்ட உணவை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, காலை உணவு குறித்து குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, இப்பகுதி காலநிலை மாற்றம் மற்றும் சூழலை கருத்தில் கொண்டு இட்லி, பொங்கல் உள்ளிட்ட கலவை உணவை சுவையாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
துாய்மை பணியாளர்கள் கூறுகையில்,'கடந்த இரண்டு நாட்களில் இட்லி, ரவா உப்புமா வழங்கினர். அவை உண்ண முடியாத நிலையில் இருந்தது.
ஆனால், இன்று (நேற்று) வழங்கப்பட்ட பொங்கல் சுவையாக இருந்தது. தொடர்ந்து இதுபோன்று, சுவையான காலை உணவு வழங்க வேண்டும்' என்றனர்.