ADDED : மார் 19, 2025 08:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் பஸ் ஸ்டாண்டில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. பஸ் ஸ்டாண்டில் உள்ள விடுதி சீரமைப்புக்கு தீவிரம் காட்டும் நகராட்சி நிர்வாகம் பயணிகளின் அத்தியாவசிய தேவைகளான இருக்கை உள்ளிட்ட வசதிகளை இதுவரை மேற்கொள்ளவில்லை.
பஸ் ஸ்டாண்ட் வெளிப்பகுதியில் கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு, நிழற்கூரை பெயரளவிற்கு அமைக்கப்பட்டது.
இதன் மீது கோத்தகிரி சென்ற கனரக வாகனம் மோதி உடைந்து தொங்கிய போது, தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. மீண்டும் வாகனங்கள் இதன் மீது மோதி வருவதால், உடைந்து பயணிகள் மீது கூரை விழும் அபாயம் உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.