/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்துக்கு அதிரடியாக 'சீல்'
/
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்துக்கு அதிரடியாக 'சீல்'
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்துக்கு அதிரடியாக 'சீல்'
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்துக்கு அதிரடியாக 'சீல்'
ADDED : நவ 12, 2024 06:07 AM

பந்தலுார்; பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பஜாரில், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, அய்யன்கொல்லி பஜார் பகுதியில் மேத்யூ என்பவர், தனது நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதாக, யாக்கோபு என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.இது குறித்து ஆய்வு மேற்கொள்ள, சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.
ஆய்வின்போது, உரிய அனுமதி பெறாமலும், யாக்கோபு என்பவர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டப்பட்டதாக தெரியவந்தது.
மேலும், 'கட்டுமான பணியை நிறுத்தி வைக்கவும், தொடர்ந்து கட்டடம் கட்ட கூடாது,' என்றும், ஊராட்சி சார்பில், கடிதம் மூலமும் நேரிலும் பல முறை அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், மேத்யூ இதனை அலட்சியப்படுத்தி தொடர்ந்து கட்டடத்தை கட்டி முடித்தார். இது குறித்த அறிக்கை அனுப்பப்பட்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், 'உரிய அனுமதி பெறாமல் யாரேனும் கட்டுமான பணியில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.