ADDED : ஜன 09, 2025 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்,; கூடலுார் ஓவேலி அருகே, கல் வீசி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கூடலுாரில் இருந்து ஓவேலி பெரியசோலைக்கு சென்ற அரசு பஸ், பெரியசோலையில் இருந்து கூடலுார் நோக்கி மாலையில் வந்தது.
சந்தனமலை அருகே, வளைவான பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் திடீரென பஸ் மீது கல் வீசியுள்ளார். அதில், பஸ்சின் ஒரு பக்க ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது. அமைந்திருந்த பெண்ணுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.
கண்ணாடி உடையும் சப்தம் கேட்டு, பஸ்சை நிறுத்திய டிரைவர் பயணிகளுடன் சேர்ந்த அந்த நபரை விரட்டினர். ஆனால், அவர் ஓடி தலைமறைவாகி விட்டார். பஸ் ஓட்டுனர் அப்துல் காதர், நியூ ஹோப் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.