/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பட்டர் புரூட்': கிலோ ரூ.170 வரை கொள்முதல் சிறு விவசாயிகள் மகிழ்ச்சி
/
'பட்டர் புரூட்': கிலோ ரூ.170 வரை கொள்முதல் சிறு விவசாயிகள் மகிழ்ச்சி
'பட்டர் புரூட்': கிலோ ரூ.170 வரை கொள்முதல் சிறு விவசாயிகள் மகிழ்ச்சி
'பட்டர் புரூட்': கிலோ ரூ.170 வரை கொள்முதல் சிறு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 07, 2024 04:21 AM

கூடலுார், : கூடலுாரில் பட்டர் புரூட் பழங்கள் கொள்முதல் விலை கிலோவுக்கு, 170 ரூபாய் வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கூடலுார் விவசாயிகள் தேயிலை, காபி தோட்டங்களில் ஊடு பயிராகவும், வீட்டு தோட்டங்களிலும் பட்டர் புரூட் மரங்களை வளர்த்து வருவாய் ஈட்டி வருகின்றனர். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட, இவை தற்போது வருமானம் தரக்கூடிய பயிராக மாறி உள்ளது.
வெளி மார்க்கெட்டில் இதன் தேவை அதிகம் இருப்பதால், சிறு வியாபாரிகள் நேரடியாக வீடுகளுக்கு சென்று இந்த பழங்களை சேகரித்து மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இப்பகுதியில் ஆண்டுக்கு, 1100 டன் வரை பட்டர் புரூட் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது இதன் சீசன் துவங்கியுள்ளதால், கொள்முதல் செய்யப்பட்டு பழங்களை, வெளியூர்களுக்கு அனுப்புவதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, 'ஏ' கிரேடு கிலோ, 170 ரூபாய் வரையும்; 'பி' கிரேட் 80 முதல் 110 ரூபாய் வரை கொள்முதல் செய்து வருகின்றனர்
ஆண்டுக்கு ஒரு முறை மகசூல் தரும் இவை, முக்கிய வருவாய் பயிராக மாறி உள்ளதால், விவசாயிகள் இதனை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்
வியாபாரிகள் கூறுகையில், 'தற்போது கூடலுார், கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளில் பட்டர் புரூட் சீசன் துவங்கி உள்ளது. வரத்துக்குறைவாக இருப்பதால் நல்ல விலை கிடைக்கிறது. மே மாதம் வரை நல்ல விலை கிடைக்கும்,' என்றனர்.

