கூண்டில் சிக்கிய கரடி வனத்தில் விடுவிப்பு: கொதுமுடி மக்கள் நிம்மதி
கூண்டில் சிக்கிய கரடி வனத்தில் விடுவிப்பு: கொதுமுடி மக்கள் நிம்மதி
UPDATED : அக் 19, 2026 07:08 PM
ADDED : அக் 19, 2026 07:06 PM

கோத்தகிரி: கோத்தகிரி கொதுமுடி கிராமத்தில், கூண்டில் சிக்கிய கரடியை, வனதுறையினர் வனப்பகுதியில் விடுவித்தனர்.
நீலகிரி வனக்கோட்டம், ஊட்டி வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட கொதுமுடி கிராமத்தில், கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருந்து வந்தது. வீடு கதவுகளையும், விளைப்பொருட்களையும் சேதம் படுத்தி வந்தது. இதனால், கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். குறிப்பாக, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு செல்வதை தவிர்த்தனர்.
அப்பகுதி மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். என, கோரிக்கை விடுத்தனர். அதன்படி, வனத்துறை சார்பில், வைக்கப்பட்ட கூண்டில் நேற்று கரடி சிக்கியது. வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லப்பட்ட கரடி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. இதனால், பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
