/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூண்டில் சிக்கிய கரடி வனப்பகுதியில் விடுவிப்பு
/
கூண்டில் சிக்கிய கரடி வனப்பகுதியில் விடுவிப்பு
ADDED : ஜூன் 13, 2025 09:23 PM

கோத்தகிரி; கோத்தகிரி அருகே கிராமத்தில் உலா வந்த கரடி கூண்டில் சிக்கியது.
கோத்தகிரி அரவேனு கல்லாடா பகுதியில், பல நாட்களாக கரடி நடமாட்டம் இருந்து வந்தது. கிராம மையப் பகுதியில் அமைந்துள்ள, முருகன் கோவிலுக்குள் புகுந்து பூஜை பொருட்களை சேதப்படுத்தி வந்தது. இதனால், கிராம மக்கள் அச்சம் அடைந்து, கரடியை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதன்படி, வனத்துறை சார்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கண்காணிப்பு கேமரா பொருத்தியதுடன், கூண்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை கரடி கூண்டில் சிக்கியது. வனத்துறையினர் முதுமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நேற்று மாலை விடுவித்தனர். இதனால், கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.