/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின கிராமத்தில் முகாம் பள்ளி மாணவர்கள் சீரமைப்பு பணி
/
பழங்குடியின கிராமத்தில் முகாம் பள்ளி மாணவர்கள் சீரமைப்பு பணி
பழங்குடியின கிராமத்தில் முகாம் பள்ளி மாணவர்கள் சீரமைப்பு பணி
பழங்குடியின கிராமத்தில் முகாம் பள்ளி மாணவர்கள் சீரமைப்பு பணி
ADDED : செப் 30, 2025 10:17 PM

பந்தலுார்,; பந்தலுார் அருகே போத்துக்கொல்லி பழங்குடியினர் கிராமத்தில், லாரன்ஸ் பள்ளி மாணவர்கள் சமூக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பந்தலுார் அருகே போத்துக்கொல்லி பழங்குடியின கிராமத்தை ஒட்டி, பி.ஆர்.எப். பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பழங்குடியின மக்களுக்கான மருத்துவமனை மற்றும் சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இவற்றை, நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் பராமரித்து வரும் நிலையில் கட்டடம் சிதிலமடைந்து காணப்பட்டது.
இந்நிலையில், ஊட்டியில் செயல்படும் லாரன்ஸ் பள்ளி மாணவர்கள், கிராமத்தில் முகாமிட்டு நலப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தால், பழங்குடியினர் கிராமத்தில் செல்லும் சாலை மருத்துவமனை வளாகத்தை சீரமைத்தல் போன்ற பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் மருத்துவமனை அருகே பழங்குடியின மக்கள், பயன்படுத்தும் வகையில் சமையலறை கட்டும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். உடற்கல்வி ஆசிரியர் குல்தீப் சிங், ஆய்வாளர் சகாதேவன் மற்றும் திவ்யங்கா சிக்காலர் தலைமையிலான மாணவர்கள், தங்கள் சொந்த செலவில், சமூக பணி களில் ஈடுபட்டனர். இவர்களுக்கு, நீலகிரி மாவட்ட ஆதிவாசி சங்க பொறுப்பாளர்கள் புஷ்பகுமார், விஜயா, நீலகண்டன் மற்றும் பழங்குடியின மக் கள் பாராட்டு தெரிவித் தனர்.