முகாமிட்டுள்ள ஒற்றை யானை கிராம மக்கள் நடமாடுவதில் சிக்கல்
முகாமிட்டுள்ள ஒற்றை யானை கிராம மக்கள் நடமாடுவதில் சிக்கல்
UPDATED : நவ 19, 2026 07:28 PM
ADDED : நவ 19, 2026 07:24 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே காவயல் பகுதியில், முகாமிட்டுள்ள ஒற்றல் யானையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கிராம பகுதிகள் அமைந்துள்ளன. இதனால், வனப்பகுதிகள் வழியாக உலா வரும் யானைகள், குடியிருப்புகளை ஒட்டி அவ்வப்போது முகாமிட்டு வருகின்றன.
இந்நிலையில், சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, காவயல் பகுதியில் ஒற்றை ஆண் யானை தனியாக உலா வருகிறது. ‘டான் டீ’ தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு அருகே, இந்த யானை முகாமிட்டு உள்ளதால், தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். இந்த பகுதிக்கு வாகன வசதி இல்லாத நிலையில் மக்கள், மாணவர்கள் வேறு வழியின்றி நடந்து செல்கின்றனர்.
எனவே, இப்பகுதியில் கூடுதலாக வனத்துறை பணியாளர்களை, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டியது அவசியம்.
