/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாயிகள் நல சங்க மருத்துவ முகாம்
/
விவசாயிகள் நல சங்க மருத்துவ முகாம்
ADDED : பிப் 17, 2025 10:27 PM
கோத்தகிரி; கோத்தகிரியில் மலை மாவட்ட சிறு விவசாயிகள்நல சங்கம் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.
மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்க தலைவர் தும்பூர் போஜன் முகாமை துவக்கி வைத்து பேசுகையில், ''எங்கள் சங்கம், விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருவதுடன், சிறுவிவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி, மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
எதிர்வரும் நாட்களில், கல்வி சார்ந்த முன்னெடுப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்,''என்றார்.
முகாமில், மருத்துவர்கள் சிவகுமார் மற்றும் அனுஸ்ரீ ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
அதில், 'ரத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, இ.சி.ஜி.,' என, அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமில், கோத்தகிரி வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 100க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

