/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் கார் கண்காட்சி: சாகசங்களுடன் போக்குவரத்து விழிப்புணர்வு
/
குன்னுாரில் கார் கண்காட்சி: சாகசங்களுடன் போக்குவரத்து விழிப்புணர்வு
குன்னுாரில் கார் கண்காட்சி: சாகசங்களுடன் போக்குவரத்து விழிப்புணர்வு
குன்னுாரில் கார் கண்காட்சி: சாகசங்களுடன் போக்குவரத்து விழிப்புணர்வு
ADDED : அக் 04, 2025 05:40 AM

குன்னுார்: குன்னுார் பிராவிடன்ஸ் கல்லுாரி சார்பில், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,'அன்றும்; இன்றும்' என்ற தலைப்பில், கார், பைக் கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் பிராவிடன்ஸ் கல்லுாரி மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பழங்கால கார்கள், தற்போதைய கார்கள், ஜீப்கள், பைக்குகளின் கண்காட்சி நடந்தது.
பைக் சாகச வீரர் ராஜேஷ், ரவீந்திரநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
அதில், 'பழங்கால காண்டசா, டாட்ஜ் கிங்ஸ்வே, வில்லிஸ் ஜீப், மாருதி-800,' உட்பட பல வகையான கார்கள் மற்றும் தற்போதைய வாகனங்களான, பெலேனோ, மகேந்திரா உட்பட பல்வேறு வாகனங்களும கண்காட்சியில் இடம் பெற்றன.
பல்வேறு வண்ணங்களில் கார்கள் வலம் வந்ததுடன், முன்புறம் மற்றும் பின்புறம் நெருப்பு புகை வெளியேறும் வகையிலான கார்கள் வடிவமைக்கப்பட்டு, சாகசமும் நிகத்தப்பட்டது. தொடர்ந்து, ஆர்எக்ஸ்-100 உட்பட பல்வேறு நவீன பைக்குகளின் சாகசம் இடம் பெற்றது.
மேலும், 'சாலைகளில் கார்களில், 'சீட் பெல்ட் அணியாமல் செல்வது; மேல் பகுதியில் நின்று செல்பி எடுத்து ஓட்டுவது,' உள்ளிட்டவற்றை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது. கல்லுாரி முதல்வர் ஷீலா, செயலர் அல்போனசா, தன்னார்வலர் அமிர்தராஜ் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை மாணவிகள் செய்திருத்தனர்.