/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரபணு மாற்றத்தால் குலை தள்ளிய வாழைக்கன்று
/
மரபணு மாற்றத்தால் குலை தள்ளிய வாழைக்கன்று
ADDED : அக் 05, 2025 02:04 AM

பந்தலூர்:நடவு செய்த 60 நாளில் குலை தள்ளிய வாழை கன்று மரபணு மாற்றத்தால் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில், அதிகளவிலான விவசாயிகள், நேந்திரன் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சதுப்பு நிலங்களில் நடவு செய்யப்படும் வாழை கன்றுகள், நடவு செய்த 7-வது மாதத்தில் குலை தள்ள துவங்கும். குலை தள்ளிய 3-வது மாதத்தில் வாழைக்காய் அறுவடைக்கு தயாராகும்.
பந்தலூர் அருகே நெல்லியாளம் டான் டீ 9-வது லைன் பகுதியில், இன்பசேகரன் என்பவர் நடவு செய்த வாழைகன்று, 60 நாட்களில் குலை தள்ளியது. 200க்கும் மேற்பட்ட வாழை கன்றுகள் நடவு செய்துள்ள நிலையில், ஒரு வாழைகன்று மட்டும், இதுபோல் குலை தள்ளியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்று வட்டார விவசாயிகள் இதனை ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஜெயலட்சுமி கூறுகையில், ''விவசாயத்தில் மரபணு மாற்றங்களால் இதுபோன்று, குறிப்பிட்ட பருவம் வருவதற்குள் அறுவடைக்கு தயாராகும். எனினும் சம்பந்தப்பட்ட தோட்டத்தை நேரில் ஆய்வு செய்தபின் முழுமையான விபரம் தெரியவரும்,'' என்றார்.