/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த கார் மீட்பு
/
பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த கார் மீட்பு
ADDED : அக் 07, 2025 12:04 AM

குன்னுார்:குன்னுார் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், உள்ளே சிக்கிய நபரை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்டனர்.
குன்னுார் பேரட்டி பாரத் நகரை சேர்ந்த நாதன் என்பவரின் மகன் அந்தோணி,27. நேற்று முன்தினம் இரவில் வண்டிச்சோலையில் இருந்து பாரஸ்ட் டேல் சாலை வழியாக வால்ஸ்வேகன் காரில், சோலடா மட்டத்தை சேர்ந்த எபினேசர் என்பவரும் உடன் சென்றுள்ளார்.
அப்போது, பத்தடி பள்ளத்தில் இருந்த கால்வாயில், கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தோணி வீட்டிற்கு சென்றுள்ளார். தகவலின் பேரில், அப்பர் குன்னுார் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காரில் சிக்கி இருந்த எபினேசரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கார் பள்ளத்திலிருந்து மீட்கப்பட்டது. அப்பர் குன்னுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.