/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பார்வையற்றோர் கால்பந்து போட்டி: கோத்தகிரி மாணவன் அசத்தல்
/
பார்வையற்றோர் கால்பந்து போட்டி: கோத்தகிரி மாணவன் அசத்தல்
பார்வையற்றோர் கால்பந்து போட்டி: கோத்தகிரி மாணவன் அசத்தல்
பார்வையற்றோர் கால்பந்து போட்டி: கோத்தகிரி மாணவன் அசத்தல்
ADDED : அக் 07, 2025 12:03 AM

கோத்தகிரி;சர்வதேச பார்வையற்றோர் கால்பந்து போட்டியில், கோத்தகிரி இளைஞர் பங்கேற்று சாதித்துள்ளார்.
பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடுகள் உள்ளவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, சத்தம் எழுப்பும் பந்துடன் விளையாடும் பார்வையற்றோர் கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இது, தலா, 5 வீரர்கள் பங்கேற்கும் விரைவான கால்பந்து விளையாட்டாகும்.
அதில், கோல் கீப்பரை தவிர, இதர, 4 பேர் பார்வை குறைபாடு உள்ளவர்களாகவும், தங்களது கண்களை மறைக்கும் வகையில், மாஸ்க் அணிந்து விளையாடும் இவர்களை, பயிற்சியாளர் மற்றும் கோல் கீப்பர் வழிநடத்துவர்.
இந்நிலையில், கேரள மாநிலம், கொச்சியில் சர்வதேச அளவிலான இந்த போட்டி, கடந்த சில நாட்களாக நடந்தது. இதில், இந்திய அணிக்காக தமிழகத்தை சேர்ந்த, கோத்தகிரி கேர்பன் கிராமத்தை சேர்ந்த கிரண் மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த டேவிட் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
இந்த போட்டியில், இந்தியா, இங்கிலாந்து, இத்தாலி, ஈரான், போலந்து, ஓமன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளின் அணிகள் பங்கேற்றன. இதில், இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே இறுதிப்போட்டி நடந்தது.
அதில், 6:2 என்ற போல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், கோல் கீப்பராக நின்று வெற்றி பெற்று, கோத்தகிரி திரும்பிய கிரணுக்கு, விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர். கோத்தகிரி தனியார் பள்ளியில் கிரண் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.