UPDATED : நவ 12, 2026 01:57 PM
ADDED : நவ 12, 2026 01:52 PM

கோத்தகிரி:
கோத்தகிரி பகுதியில் விலை வீழ்ச்சியிலும், கேரட் அறுவடை செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட மழை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கோத்தகிரியில் கூக்கல்தொரை, நெடுகுளா மற்றும் ஈளாடா உள்ளிட்ட பகுதிகளில், அதிக ஏக்கர் பரப்பளவில் கேரட் பயரிடப்பட்டுள்ளது. கடந்த வாரம், ஒரு கிலோ கேரட்டுக்கு, உள்ளூர் மண்டிகளில், 12 ரூபாய்க்கு விலை கிடைத்தது. தற்போது, வரத்து காரணமாக, நேற்று, 30 ரூபாய் என, சற்று விலை உயர்ந்துள்ளது.
இடுப்பொருட்களின் விலையேற்றம், கூலி உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை, விற்பனைக்கு கொண்டு செல்ல லாரி வாடகை, மண்டி கமிஷன் மற்றும் மண்டி ஏற்று இறக்கு கூலி உள்ளட்ட செலவினங்கள் அதிகமாக உள்ளதால், ஒரு கிலோவுக்கு, 50 ரூபாய்க்கு குறையாமல் விலை கிடைத்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு ஓரளவு விலைக்கிடைக்கும்.
தற்போது, கடந்த வாரத்தை காட்டிலும், இரு மடங்கு விலை அதிகரித்து இருப்பதால், விவசாயிகள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர். இந்நிலையில் வரும் நாட்களில் மழை தீவிரம் அடைந்தால், அறுவடைக்கு தயாரான கேரட், தோட்டத்திலேயே அழுகி விடும் என்பதால், விவசாயிகள் அறுவடை பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
