/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காரில் சாகசம் காட்டிய மாணவர்கள் மீது வழக்கு
/
காரில் சாகசம் காட்டிய மாணவர்கள் மீது வழக்கு
ADDED : மார் 01, 2024 10:19 PM
மேட்டுப்பாளையம்:காரமடை - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 29ம் தேதி இரவு கல்லுாரி மாணவர் 4 பேர், வாடகை காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மதுபோதையில் இருந்தனர்.
காரின் நான்கு கதவுகளிலும், நான்கு பேர் ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு ஆட்டம் போட்டனர். இதை பின் தொடர்ந்து வந்த வாகனங்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதுகுறித்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் விசாரித்து, காரை பறிமுதல் செய்தனர். பின் காரில் பயணித்த கோவை ஆலாந்துறையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்தனர்.

