/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிபோதையில் தொழிலாளி ஓட்டிய வாகனம் விபத்து ஏற்படுத்தியதால் வழக்கு
/
குடிபோதையில் தொழிலாளி ஓட்டிய வாகனம் விபத்து ஏற்படுத்தியதால் வழக்கு
குடிபோதையில் தொழிலாளி ஓட்டிய வாகனம் விபத்து ஏற்படுத்தியதால் வழக்கு
குடிபோதையில் தொழிலாளி ஓட்டிய வாகனம் விபத்து ஏற்படுத்தியதால் வழக்கு
ADDED : ஜூன் 23, 2025 04:36 AM
குன்னுார்: அருவங்காடு அருகே, குடிபோதையில், பொலிரோ வாகனத்தை ஓட்டி வந்து, அரசு பஸ் உட்பட வாகனங்கள் மீது, மோதி விபத்தை ஏற்படுத்திய, தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குன்னுார் கம்பி சோலையை சேர்ந்த தொழிலாளி வினித், 23. நேற்று முன்தினம் அருவங்காட்டில் இருந்து ஊட்டி நோக்கி, தனது மகேந்திரா பொலிரோ வாகனத்தில் சென்றபோது, தாறுமாறாக ஓட்டியுள்ளார்.
இதில், பிக்கட்டி அருகே டொயோட்டா கிளன்சா, அரசு சொகுசு பஸ் உட்பட நான்கு வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதால் வாகனங்கள் சேதமடைந்தன. உடன் இருந்த நபர் தப்பித்து ஓட்டம் பிடித்துள்ளார். படுகாயமடைந்த வினித், ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி -- கன்னியாகுமரி அரசு சொகுசு பஸ் டிரைவர் பொன்முத்து, கார் உரிமையாளர் அருண்குமார் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், அருவங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. தலைமறைவான நபரை தேடி வருகிறோம்,' என்றனர்.