/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முத்திரைத்தாள் மோசடியில் 'மாஜி' எம்.எல்.ஏ., உட்பட 8 பேர் மீது வழக்கு
/
முத்திரைத்தாள் மோசடியில் 'மாஜி' எம்.எல்.ஏ., உட்பட 8 பேர் மீது வழக்கு
முத்திரைத்தாள் மோசடியில் 'மாஜி' எம்.எல்.ஏ., உட்பட 8 பேர் மீது வழக்கு
முத்திரைத்தாள் மோசடியில் 'மாஜி' எம்.எல்.ஏ., உட்பட 8 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 18, 2025 12:25 AM

கோத்தகிரி; கோத்தகிரி அருகே, கொணவக் கொரை பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவரது மகன் திலக், கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், முன்னாள் எம்.எல்.ஏ ., சாந்தி ராமு மற்றும் அவருடைய சகோதரர் ராஜன் மற்றும் ராஜ்குமார், ராஜு லிங்கம்மாள் துரை என்பவரின் வாரிசுகளான தீபு திலிப் ரஞ்சித் ஆகியோர், ஊட்டி முத்திரைத்தாள் விற்பனையாளர் கோஷியிடம், 50 ரூபாய் முத்திரை தாள்களை, 2012, பிப். 8 மற்றும் 12ம் தேதிகளில் வாங்கி அந்த முத்திரைத்தாள்களில் உள்ள தேதியை மாற்றி திருத்தம் செய்து, அதே முத்திரைத்தாளில் போலியான ஆவணங்களை தயாரித்து உள்ளனர்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மேற்கண்ட தகவல்களை பெற்று, மாவட்ட பதிவாளர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. எஸ்டேட் டீ பேக்டரி என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் உள்ள முத்திரைத்தாள்கள் தேதிகள் மாற்றப்பட்டிருப்பது விசாரணை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது.
அரசை ஏமாற்றி போலி முத்திரை தாள் பயன்படுத்தி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் தேதியை திருத்தம் செய்து போலியாக ஆவணங்கள் தயாரித்து அந்த ஆவணத்தை வைத்து பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு, புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., உட்பட, 8 பேர் மீது கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.