/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் டீ கடையில் காஸ் கசிவால் தீ விபத்து: ஒருவர் காயம்
/
குன்னுார் டீ கடையில் காஸ் கசிவால் தீ விபத்து: ஒருவர் காயம்
குன்னுார் டீ கடையில் காஸ் கசிவால் தீ விபத்து: ஒருவர் காயம்
குன்னுார் டீ கடையில் காஸ் கசிவால் தீ விபத்து: ஒருவர் காயம்
ADDED : பிப் 18, 2025 09:39 PM

குன்னுார்; குன்னுார் பெட்போர்டு பகுதியில் டீ கடையில் காஸ் குழாயில் ஏற்பட்ட கசிவால் தீ பிடித்து ஒருவர் காயமடைந்தார்.
குன்னுார் பெட்போர்டு பகுதியில் சிறிய டீக்கடை நடத்துபவர் லட்சுமி,65. நேற்று மாலை, 4:00 மணி அளவில் இவரின் கடையில் திடீரென தீ பிடித்துள்ளது.
அதில், காயமடைந்த லட்சுமி உடனடியாக, குன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அப்பகுதியை சேர்ந்த மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்; தீயணைப்பு துறையினரும் வந்து தீயை கட்டுப்படுத்தினர். போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'காஸ் குழாயில் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது,' என, தெரியவந்தது.