பூனை தப்பியது; நாய் சிக்கயது சிறுத்தையால் பஜாரில் பரபரப்பு
பூனை தப்பியது; நாய் சிக்கயது சிறுத்தையால் பஜாரில் பரபரப்பு
ADDED : நவ 17, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
மஞ்சூர்: மஞ்சூர் பஜாரில் விரட்டி சென்ற பூனை தப்பியதால், வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்வி சென்ற ‘வீடியோ’ வைரலாகி வருகிறது.
மஞ்சூர் பஜாரில் சமீப காலமாக காட்டெருமை, கரடி, சிறுத்தை, குரங்கு உட்பட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கரடி, சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இன்று (நவ.,17) அதிகாலை, மஞ்சூர் பஜாரில் உலா வந்த சிறுத்தை அந்த வழியாக வந்த பூனையை வேட்டையாட விரட்டியது. சிறுத்தையை கண்டதும் பூனை மின்னல் வேகத்தில் ஓடிதப்பியது.
சப்தம் கேட்டு ஒரு வீட்டிற்குள் இருந்து நாய் வெளியில் வந்த போது நாயை கவ்வி வனப்பகுதிக்குள் சென்றது. இதன் ‘வீடியோ’ வைரலான நிலையில், வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
