/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் கால்நடை உலா; வாகன நெரிசல்
/
ஊட்டியில் கால்நடை உலா; வாகன நெரிசல்
ADDED : ஜூலை 13, 2025 08:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; ஊட்டி நகரில் கால்நடைகள் உலா வருவதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
ஊட்டி நகரில் பஸ் ஸ்டாண்ட், மெயின்பஜார், அப்பர்பஜார், ஐந்துலாந்தர், மாரியம்மன்கோவில், கமர்ஷியல் சாலை, தாவரவியல் பூங்கா, சேரிங்கிராஸ் பகுதியில் காலை, மாலை நேரங்களில் அதிகளவில் கால்நடைகள் உலா வருவதால், வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் பொது மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள், ஆய்வு செய்து கால்நடைகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.