/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் நெடுஞ்சாலையில் கால்நடைகள் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு

UPDATED : ஜூலை 12, 2025 12:14 AM
ADDED : ஜூலை 11, 2025 11:09 PM

கோத்தகிரி, ; கோத்தகிரி, குன்னுார் வழித்தடத்தில், இளித்தொரை- எடப்பள்ளி இடையே கால்நடைகள் சாலையில் உலா வருவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இவ்வழித்தடத்தில், அரசு பஸ்கள் உட்பட தனியார் வாகனங்களில் இயக்கம் நாள்தோறும் அதிகமாக உள்ளது. நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ள சாலையில், வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று வருகின்றன.
இந்நிலையில், சமீப காலமாக இச்சாலையில், இளித்துரை மற்றும் எடப்பள்ளி இடையே, கால்நடைகள் உலா வருவது அதிகரித்துள்ளது.
கூட்டமாக வரும் கால்நடைகள், சாலையில் அங்குமிங்கும் ஓடுவதாலும், நிழலில் படுத்து விடுவதாலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது அவசியம். அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.