/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெடிமருந்து தொழிற்சாலை பணிக்குழு தேர்தல்; சி.எப்.எல்.யு.,-- டி.எப்.எல்.யு., வெற்றி

ADDED : ஏப் 14, 2025 06:49 AM
குன்னுார் : அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பணிக்குழு தேர்தலில், சி.எப்.எல்.யு.,--- டி.எப்.எல்.யு., வெற்றி பெற்றன.
நீலகிரி மாவட்டத்தில், பாதுகாப்பு துறைக்கு சொந்தமான, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை நுாற்றாண்டு காலமாக இயங்கி வருகிறது.
தொழிற்சாலையில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பணிக்குழு தேர்தல், கேண்டீன் மேனேஜிங் கமிட்டி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நடப்பு இரு ஆண்டுகளுக்கான தேர்தல் நடந்தது.
அதில், 'சி.ஐ.டி.யு., ஆதரவு பெற்ற கார்டைட் பேக்டரி லேபர் யூனியன் (சி.எப்.எல்.யு.,) மற்றும் பி.எம்.எஸ்., ஆதரவு பெற்ற, டிபன்ஸ் பேக்டரி லேபர் யூனியன் (டி.எப்.எல்.யு.,), இணைந்து பணிக்குழுவிற்கு, 10 வேட்பாளர்கள், கேண்டீன் மேனேஜிங் கமிட்டிக்கு இருவர்,' என, 12 பேர் நிறுத்தப்பட்டனர்.
இந்த அணிகளுக்கு எதிராக, ஐ.என்.டி.யு.சி., ஆதரவு பெற்ற நேஷ்னல் எம்ப்ளாய்ஸ் யூனியன் (என்.இ.யு.,) போட்டியிட்டது.
1,050 தொழிலாளர்கள் ஓட்டளித்ததில், 6:4 என்ற விகிதாசாரத்தில், சி.எப்.எல்.யு., -டி.எப்.எல்.யு., சங்கத்தினர் வெற்றி பெற்றனர். இதில், பணிக்குழு உறுப்பினர்களாக அரவிந்தன், ஆரோக்கியராஜ், அருண், ஹரிஹர சுப்ரமணியன், செந்தில்குமார், விவேக், சிவக்குமார், முரளி, ஸ்ரீதரன், வெங்கடேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டனர்.
கேண்டீன் மேனேஜிங் கமிட்டிக்கு தியாகராஜன், சுரேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டனர். இந்த குழுவினர் பட்டாசு வெடித்து, வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.