/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் 'சத்ருமாழ்' நிகழ்ச்சி; ஜெயின் சமூகத்தின் உபவாச ஊர்வலம்
/
ஊட்டியில் 'சத்ருமாழ்' நிகழ்ச்சி; ஜெயின் சமூகத்தின் உபவாச ஊர்வலம்
ஊட்டியில் 'சத்ருமாழ்' நிகழ்ச்சி; ஜெயின் சமூகத்தின் உபவாச ஊர்வலம்
ஊட்டியில் 'சத்ருமாழ்' நிகழ்ச்சி; ஜெயின் சமூகத்தின் உபவாச ஊர்வலம்
ADDED : ஆக 10, 2025 09:23 PM

ஊட்டி; ஊட்டி வாழும் ஜெயின் சமூகத்தினரின் 'சத்ருமாழ்' எனப்படும் நான்கு மாத ஆன்மிக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 'உபவாசம்' ஊர்வலம் நடந்தது.
ஊட்டியில் வாழும் ஜெயின் சமூகத்தினர் சத்ருமாழ் எனும் நான்கு மாத ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கடந்த, 30 நாட்கள் தொடர் உண்ணாவிதம் இருந்தவர்களின் ஆன்மிக ஊர்வலம் நடந்தது.
இதற்கு, மஹா சத்ரிசாத்விஜி தலைமை வகித்தார். அதில், தீபக் கோத்தாரி மற்றும் அவரின் துணைவியார் சீக்கா ஆகியோர், 'மாஸ்கிண்' எனும், 30 நாட்கள் தொடர்ந்து கடும் விரதம் முடிந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பூனம் கோத்தாரி மற்றும் குடும்பத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சந்ருகலாடா கூறுகையில்,''ஆண்டுதோறும் ஊட்டியில் நடக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளால் இளைஞர்கள் மத்தியில் ஆன்மிக எழுச்சி ஏற்பபடும். அடுத்த சந்ததிகளுக்கு பிரார்த்தனைகள் தொடர்பான புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும்,'' என்றார்.