/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பனியில் பூத்த 'செர்ரி பிளாசம்' பூக்கள் ஜப்பான் நாட்டின் தேசிய மலருக்கு சீசன்

ADDED : ஜன 19, 2025 01:28 AM

குன்னுார்,:நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, ஏராளமான வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டன. இதில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த, சகுரா என அழைக்கப்படும், 'செர்ரி பிளாசம்' மரத்தில், தற்போது மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பனி காலத்தில் பூக்கும் மலர்கள், அடுத்து வரும் வசந்த காலத்தை வரவேற்று உதிரும்.
பூங்காவில் நுாற்றுக்கணக்கான பறவை இனங்கள் உள்ள நிலையில், இந்த மலரின் நிறம் மற்றும் வாசனையால், பல்வேறு பறவைகள் மற்றும் பூச்சிகள் ஈர்க்கப்படும். சுற்றுலா பயணியர், இந்த மரங்களின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துச் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
தோட்டக்கலை துறையினர் கூறுகையில், 'ஜப்பான் நாட்டின் தேசிய மலர் செர்ரி பிளாசம். அங்கு செர்ரி பிளாசம் திருவிழா நடத்தப்படுகிறது. இதில் தயாரிக்கும் சாக்லேட் பிரபலமாக உள்ளது. வசந்த காலத்தை வரவேற்கும் இந்த மலர்கள், நீலகிரியில், பல இடங்களிலும் பூத்துள்ளன.
'சிம்ஸ் பூங்காவில் உள்ள மரங்களில், 2023ல் ஆக., முதல் டிச., வரை பூக்கள் பூத்தன. தற்போது, 2024 டிச., மாதத்தில் பூத்த இந்த மலர்கள், பிப்., வரையிலான சீசன் வரை இருக்கும்' என்றனர்.