/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதல்வர் பிறந்தநாள் பொது கூட்டம்; உள்ளூர் மக்களுக்கு நல திட்டம்
/
முதல்வர் பிறந்தநாள் பொது கூட்டம்; உள்ளூர் மக்களுக்கு நல திட்டம்
முதல்வர் பிறந்தநாள் பொது கூட்டம்; உள்ளூர் மக்களுக்கு நல திட்டம்
முதல்வர் பிறந்தநாள் பொது கூட்டம்; உள்ளூர் மக்களுக்கு நல திட்டம்
ADDED : மார் 25, 2025 09:20 PM

கோத்தகிரி ; கோத்தகிரி மார்க்கெட் திடலில், முதல்வர் ஸ்டாலினின், 72வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
கோத்தகிரி பேரூராட்சி செயலாளர் காளிதாஸ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜூ, பேச்சாளர்கள் சுஜாதா மற்றும் உத்திரபதி ஆகியோர், மாநில அரசின் சாதனைகள் குறித்து பேசினர். கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பீமன் முன்னிலை வகித்தனர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில் ரங்கராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன், மாவட்ட அவைத்தலைவர் போஜன் உட்பட, கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, கட்சியினர் மற்றும் பொதுமக்கள்,200 க்கும் மேற்பட்டோருக்கு, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கட்சி நிர்வாகி கணபதி நன்றி கூறினார்.