/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம்: ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி
/
குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம்: ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி
குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம்: ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி
குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம்: ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி
ADDED : நவ 14, 2025 09:09 PM

ஊட்டி: ஊட்டியில் தேசிய குழந்தைகள் தின விழாவை ஒட்டி, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் நடந்த பேரணியை, கலெக்டர் லட்சுமிபவ்யா, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்துடன், பேரணியை துவக்கி வைத்தார். பேரணி எச்.ஏ.டி.பி., திறந்தவெளி மைதானத்தை அடைந்தது.
அதில், பள்ளி கல்வித்துறை, மருத்துவத்துறை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, காவல் துறை, குழந்தைகள் நல குழு, குழந்தைகள் இல்ல நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் பதாகைகள் ஏந்தியப்படி பங்கேற்றனர்.
தொடர்ந்து, கலைக்குழு வாயிலாக, விழிப்புணர்வு வீதி நாடகம் நடந்தது. ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், இளைஞர் நீதி குழும உறுப்பினர் சண்முகா ஆனந்த், குழந்தைகள் நலக்குழு தலைவர் மதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் பிரிவீணா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.