/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கட்டட பொறியாளர் சங்கத்தினர் மண் உண்ணும் நுாதன போராட்டம்
/
கட்டட பொறியாளர் சங்கத்தினர் மண் உண்ணும் நுாதன போராட்டம்
கட்டட பொறியாளர் சங்கத்தினர் மண் உண்ணும் நுாதன போராட்டம்
கட்டட பொறியாளர் சங்கத்தினர் மண் உண்ணும் நுாதன போராட்டம்
ADDED : மார் 19, 2025 08:13 PM

ஊட்டி; நீலகிரி கட்டட பொறியாளர்கள் சங்கத்தினர் மண் உண்ணும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் கட்டடம் கட்ட மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் விண்ணப்பித்து அந்த குழு ஒப்புதல் அளித்தால் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியும்.
கடந்த, 3 ஆண்டுகளாக குடியிருப்பு கட்ட விண்ணபித்தவர்களில், ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து, நீலகிரி கட்டட பொறியாளர் சங்கம் சார்பில், ஊட்டி ஏ.டி.சி., சுதந்திர திடலில் மண் உண்ணும் நுாதன போராட்டம் நடந்தது.
சங்க தலைவர் திலக் நிருபர்களிடம் கூறுகையில், ''கட்டட அனுமதி எவ்வித காரணமும் இல்லாமல் வழங்கப்படாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நிலைப்பாட்டை புரிந்துகொள்ள இயலாத நிலையில் உள்ளோம்.
கட்டட அனுமதி குழுவின் தலைவராக உள்ள மாவட்ட கலெக்டர் கால தாமத்துக்கான காரணத்தை வெளிப்படையாக கூற வேண்டும்,'' என்றார்.