/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிவில் இன்ஜினியர்ஸ் சங்க ஆர்ப்பாட்டம்
/
சிவில் இன்ஜினியர்ஸ் சங்க ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 12, 2024 01:03 AM
ஊட்டி:ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே, 'நீலகிரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன்' சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் திலக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் மாதேஷ் பொருளாளர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்தில், மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள குடியிருப்பு கட்டடங்களின் வரைபடங்களை உடனடியாக ஆய்வு செய்து, ஒப்புதல் வழங்க வேண்டும்;
அதிகபட்சமாக, 60 நாட்களில் ஒற்றை சாளர போர்டல் மூலம் விண்ணப்பித்த அனைத்து கட்டட வரைப்படங்களுக்கும் ஒப்புதல் வழங்க வேண்டும்.
நீலகிரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் குழுவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட, இரண்டு பொறியாளர்களையாவது, நீலகிரி மாவட்ட கட்டட திட்ட குழுவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்பன உட்பட, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

