சாரல் மழையுடன் மேக மூட்டம் வாகன ஓட்டுனர்கள் திணறல்
சாரல் மழையுடன் மேக மூட்டம் வாகன ஓட்டுனர்கள் திணறல்
ADDED : ஜூன் 29, 2026 04:43 AM

கூடலூர்: - கூடலூரில், பகல் நேரத்தில மழையுடன் தொடரும் மேக மூட்டத்தால் ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்க சிரமப்பட்டனர்.
கூடலூர், பந்தலூர் பகுதிகளில், பருவமழை அவ்வப்போது மிதமாக பெய்து வருகிறது. காலை, மாலை நேரங்களில், சாரல் மழையுடன் மேகமூட்டம தென்படுகிறது.
மேக மூட்டத்தால் போதிய அளவில் வெளிச்சம் இல்லாததால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களில் வனவிலங்கு அச்சத்தில் வேலை செய்து வருகின்றனர்.
உள்ளூர் வாகன ஓட்டுனர்கள் மற்றும் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க சிரமப்பட்டனர். நேற்று, வார விடுமுறையை ஒட்டி வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கூடலூர் பகுதியில் காலையில் கடும் மேகமூட்டம் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டு வாகனங்களை இயக்கினர்.
அதிகாரிகள் கூறுகையில், 'காலநிலை மாற்றம் மேகமூட்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
விபத்துகளை தவிர்க்க, ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும்' என்றனர்.
