தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பராமரிப்பின்றி அவல நிலையில் தடுப்பணைகள்

 பராமரிப்பின்றி அவல நிலையில் தடுப்பணைகள்

 பராமரிப்பின்றி அவல நிலையில் தடுப்பணைகள்


ADDED : ஜூன் 29, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 04:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலூர்: வனவிலங்குகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள் பராமரிப்பின்றி காணப்படுகிறது.

கூடலூர் வனக் கோட்டத்தில், கோடையில் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனப்பகுதிகளில் நீரோடை, ஆறுகள் குறுக்கே தடுப்பணைகள் அமைத்துள்ளனர். சில பகுதிகளில் கசிவுநீர் குட்டையும் அமைத்துள்ளனர். பல தடுப்பணைகள் பராமரிப்பின்றி சேதமடைந்ததால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூடலூர் கோழிக்கோடு சாலை, - நாடுகாணி இடைப்பட்ட சாலையோர வனத்தில், வனவிலங்குகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இரண்டு தடுப்பணைகள் அமைத்துள்ளனர்.

அதில், ஒன்று சேதுமடைந்து, பயனற்ற நிலையில் உள்ளது. மற்றொரு தடுப்பணையில் செடிகள், முட்புதர்கள் சூழ்ந்து வனவிலங்குகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'கோடைகாலத்தில் வனவிலங்குகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்டுள்ள பல தடுப்பணைகள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வன விலங்குகளில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய சேதமடைந்த தடுப்பணைகளை உடனடியாக சீரமைக்கவும், புதிய தடுப்பணைகளை அமைக்கவும் சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us