/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் அறுவடை முடியும் முன் பூத்த காபி பூக்கள்; மகசூல் பாதிக்கும் அபாயம்
/
கூடலுாரில் அறுவடை முடியும் முன் பூத்த காபி பூக்கள்; மகசூல் பாதிக்கும் அபாயம்
கூடலுாரில் அறுவடை முடியும் முன் பூத்த காபி பூக்கள்; மகசூல் பாதிக்கும் அபாயம்
கூடலுாரில் அறுவடை முடியும் முன் பூத்த காபி பூக்கள்; மகசூல் பாதிக்கும் அபாயம்
ADDED : ஜன 07, 2025 01:53 AM

கூடலுார்; கூடலுாரில், காபி அறுவடை செய்து வரும் நிலையில், காபி பூக்கள் பூத்துள்ளதால் மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கூடலுார், பந்தலுார் பகுதியில், தனியார் எஸ்டேட் மற்றும் சிறு விவசாயிகள், தேயிலைக்கு அடுத்தபடியாக காபி பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதியில், 'அரபிகா, ரொபஸ்டா' ரக காபி செடிகள், 16 ஆயிரத்து 500 ஏக்கரில் பயிரிட்டுள்ளனர். அதில், 'ரொபஸ்டா' ரகம் மட்டும், 10 ஆயிரத்து 700 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.
காபி செடிகளில், மார்ச் ஏப்., மாதங்களில் பூ பூக்கும். நவ., முதல் ஜன., மாதங்களில் அறுவடை நடக்கும். கடந்த ஆண்டு, காபி பூ பூத்த போது, கோடை மழை ஏமாற்றியதல் மகசூல் குறைந்து, விவசாயிகள் கவலை அடைந்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது, பச்சை காபி கிலோ, 70 ரூபாய்; காய்ந்த காபி கிலோ, 230 ரூபாய் வரையும், சுத்தம் செய்யப்பட்ட காபி பருப்பு, 400 ரூபாய் வரை கொள்முதல் விலை கிடைத்தது. இதனால், விவசாயிகள் ஆர்வத்துடன் காபி அறுவடை செய்து பதப்படுத்தி வருகின்றனர்.
தற்போது, காபி அறுவடை முடிவதற்கு முன், காபி செடிகளில் பூக்கள் பூத்துள்ளது. இதனால் நடப்பு ஆண்டு காபி மகசூலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில்,'காலநிலை மாற்றம் காரணமாக காபி செடிகளில் முன்னதாக பூக்கள் பூத்துள்ளது. காய்கள் பழுக்கும் போது பூக்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், விவசாயிகள் கவனமாக அறுவடை செய்ய வேண்டும். காபி பூக்களுக்கு கோடை மழை அவசியம். மழை ஏமாற்றினால் தண்ணீர் பாய்ச்ச 'வேண்டும்,'என்றனர்.