தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/'நெகிழி இல்லா வனம் உருவாக்க ஒத்துழைப்பு அவசியம்'

'நெகிழி இல்லா வனம் உருவாக்க ஒத்துழைப்பு அவசியம்'

'நெகிழி இல்லா வனம் உருவாக்க ஒத்துழைப்பு அவசியம்'


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 05:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி கட்டபெட்டு காப்புகாடு பகுதியில் வனத்துறை சார்பில் துாய்மை பணி நடந்தது.

கட்டபெட்டு வனச்சரகர் ஜெயக்குமார் தலைமையில்,

கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட, பிக்கபதி பிரிவு சுற்று வட்டார பிரிவில், வன விலங்குகள் மற்றும் வன பகுதிக்கு, கெடுதலாக உள்ள நெகிழி குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் என, 31 மூட்டை நெகிழி குப்பைகள் சேகரிக்கப்பட்டு மூட்டைகளாக கட்டி அகற்றப்பட்டன.

இதில், மறு சுழற்சிக்கு தேவையான குப்பைகள், கக்குச்சி ஊராட்சி அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. வனப்பகுதி மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடந்த இந்த நிகழ்வில், வானவர் பிரகாஷ், வனக்காப்பாளர்கள் காமராஜ், ராஜேஷ் குமார், தன்னார்வலர்கள் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் உட்பட, வனத்துறை ஊழியர்கள் பலர், உடன் இருந்தனர்.

நெகிழி இல்லா வனப்பகுதியை உருவாக்க, பொதுமக்கள் வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, வனத்துறை சார்பில், வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us