கலெக்டர் தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
கலெக்டர் தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
ADDED : ஆக 20, 2026 06:41 PM
ஊட்டி: ஊட்டியில், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறிதது, ஆய்வு கூட்டம் நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள, ஊட்டி, குன்னுார், கூடலுார், நெல்லியாளம் மற்றும் கோத்தகிரி ஆகிய நகராட்சிகள்; தேவர்சோலை, ஜெகதளா, கேத்தி, உலிக்கல், கீழ்குந்தா, அதிகரட்டி, நடுவட்டம், பிக்கட்டி, ஓவேலி, சோலுார் பேரூராட்சிகள்; கிராம ஊராட்சி பகுதிகளில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா பங்கேற்று வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
கலெக்டர் கூறுகையில், ‘பொது மக்களின் அடிப்படை தேவையான குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலைகள் எவ்வித தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,’ என்றார். இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உட்பட, அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
