ADDED : ஆக 20, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளின் குடிநீர் தேவையை ரேலியா அணை பூர்த்தி செய்து வருகிறது.
போதிய மழை இல்லாததால், ரேலியா அணை வறண்டு காட்சியளிக்கிறது. சேறும், சகதியும் நிறைந்த அணைபகுதி பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, மக்களுக்கு, 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும், விவசாய நிலங்களில் பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால், நேற்று முன்தினம் கிராம மக்கள் விநாயகருக்கு நீர் அபிஷேகம் செய்து கூட்டு வழிபாடு நடத்தினர். இந்நிலையில், நேற்று மழை வேண்டி தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வறண்ட ரேலியா அணை பகுதிகளில் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதில், அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.
