/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டுச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
/
ஓட்டுச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 03, 2026 06:34 AM
கோத்தகிரி: கோத்தகிரி அருகே, குஞ்சப்பனை ஓட்டுச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பனை ஊராட்சி மாமரம், சி.எஸ்.ஐ., துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடிமையங்களை கலெக்டர் லட்சுமி பவ்யா நேற்று ஆய்வு செய்தார். இந்த மையங்களில், அடிப்படை வசதிகளான, குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த சாய்வு தளம் ஆகிய ஆகியவை குறித்து, ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, வாக்காளர் பதிவு அலுவலர் சங்கீதா, கோத்தகிரி தாசில்தார் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், மற்றும் பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

