/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகராட்சி மார்க்கெட் கடைகள் கட்டுமான பணி; விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

ADDED : ஜூலை 04, 2025 09:35 PM

ஊட்டி; 'ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, 1,500க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. இவற்றை இடித்து புதிய கடைகளை கட்ட அரசு திட்டமிட்டது.
அதன்படி, ஊட்டி நகராட்சி நிர்வாகம் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சேதம் அடைந்த கடைகளை அகற்றி, புதிய கடைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்டமாக, காபி ஹவுஸ் சந்திப்பு பகுதியில், 190 பழைய கடைகள் முழுமையாக இடிக்கப்பட்டு, புதிய கடைகள் கட்டும் பணி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. தரைத்தளத்தில், 126 நான்கு சக்கர வாகனங்கள்; 163 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், 'பார்க்கிங்' வசதியுடன், 240 கடைகள் கட்டப்பட்டு வருகிறது. வியாபாரிகளுக்காக, தற்காலிக கடைகள் ஏ.டி.சி., பகுதியில் கட்டப்பட்டு வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். மழை உள்ளிட்ட காரணங்களால், புதிய கடைகள் கட்டும் பணி மந்தமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார். 'கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்,' என, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, ஊட்டி நகராட்சி கமிஷனர் வினோத், பொறியாளர் சேகரன் மற்றும் ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.