/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆற்று நீரில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி
/
ஆற்று நீரில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஜூலை 20, 2025 10:09 PM

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாடானாம்குறுச்சி பகுதியை சேர்ந்த ரசாக் என்பவரது மகன் முகமது ஹாஷிம்,22. இவர், திருச்சூர் அரசு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் கல்லூரி அருகே உள்ள ஆற்றில் குளிப்பதற்காக சென்றார். அப்போது, தாழ்வான பகுதியில் நீரில் சிக்கிக் கொண்டார். இதைக் கண்ட நண்பர்கள் கூச்சலிட்டதும், அப்பகுதி மக்கள் ஓடி வந்து, ஆற்று நீரில் இறங்கி நீண்ட நேரம் தேடினர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து நடத்திய தேடுதலில், இரவு 8:30 மணிக்கு முகமது ஹாஷிம் உடல் மீட்கப்பட்டு, திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. திருச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.