/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திறனறி தேர்வில் அசத்தல்; மாணவிக்கு பாராட்டு
/
திறனறி தேர்வில் அசத்தல்; மாணவிக்கு பாராட்டு
ADDED : டிச 09, 2025 08:13 AM

உடுமலை: தமிழக அரசின் தமிழ் இலக்கிய திறனறித்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற, மாணவிக்கு, கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு, மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அனைத்து பள்ளிகள் பங்கேற்கும், தமிழ் இலக்கிய திறனறித்தேர்வை நடத்தியது.
இதில், கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி, மலர்விழி மாநிலத்தில், நான்காவது மதிப்பெண் பெற்றார். இம்மாணவிக்கு, மாதந்தோறும், ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும்.
மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவியை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.

