ADDED : பிப் 10, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தமிழ் இலக்கிய மன்ற போட்டிகள் நடந்தது.
பேராசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் (பொ) சுபாஷினி தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களுடைய கவிதை கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், தமிழ் துறை தலைவர் கரிகாலன், உடற்கல்வி இயக்குனர் கிஷோர் குமார், ஆங்கில துறை தலைவர் பொற்கோ, உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.