/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தி.மு.க., மீது தேர்தல் அதிகாரியிடம் புகார்
/
தி.மு.க., மீது தேர்தல் அதிகாரியிடம் புகார்
ADDED : நவ 10, 2025 11:38 PM

ஊட்டி: நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமி பல்யா உத்தரவின் பேரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது.
அதில், 'பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், அரசியல் கட்சிகளின் ஓட்டு சாவடி நிலை முகவர்கள் அதிகபட்சம், 50 படிவங்கள் பெற்று வந்து வழங்கலாம்,' என, கூறப்படுகிறது. இந்நிலையில், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத், முன்னாள் எம்.பி., அர்ஜூணன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், கூடலுார் தொகுதி எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் ஆகியோர் கலெக்டரை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் நிருபர்களிடம் கூறுகையில், ' வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், ஆளுங்கட்சியினர் படிவங்களை முறைகேடாக பெற்று, பூர்த்தி செய்து, முகவர்கள் வாயிலாக பெறும் போது முறைகேடுகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. பூர்த்தி செய்த படிவங்கள் சம்மந்தப்பட்ட ஓட்டு சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தோம்,'என்றனர்.

