/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கனவு இல்ல திட்டத்தில் பணம் கையாடல் செய்ததாக புகார்
/
கனவு இல்ல திட்டத்தில் பணம் கையாடல் செய்ததாக புகார்
கனவு இல்ல திட்டத்தில் பணம் கையாடல் செய்ததாக புகார்
கனவு இல்ல திட்டத்தில் பணம் கையாடல் செய்ததாக புகார்
ADDED : டிச 05, 2025 08:39 AM
கோத்தகிரி: கோத்தகிரியில் கனவு இல்ல திட்டத்தில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரி நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த, புஷ்பராணி கலைஞர் கனவு திட்டத்தில் வீடு கட்டி வருகிறார். அடித்தளம் முதல் கூரை கான்ரீட் வரை, 3.10 லட்சம் ரூபாய் அவரது வங்கி கணத்தில் இருந்து பெற்றுள்ளார்.
வீடு கட்டுவதற்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஒரு நாளுக்கு, 336 ரூபாய் வீதம், 90 மனித சக்தி நாட்களுக்கு, 30,240 ரூபாய் வழங்கப்படுகிறது. அதற்காக, 100 நாள் வேலை திட்டத்தின் புத்தகம் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் பணம் வரவு வைக்குமாறு, புஷ்பராணி கோரி இருந்தார்.
ஆனால், நான்கு மாதம் கடந்தும் பணம் அவரது கணக்கில் வரவு வைக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அவர், அலுவலக ஆவணங்களை சரிபார்த்த போது, ஏற்கனவே, 100 நாள் வேலை திட்டத்தில் மேற்பார்வையாளர் இருந்தவர், 13 பெயர்களில் பணத்தை வாங்கியிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, பணத்தை பெற்று தருமாறு கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
ஓவர்சியர் அப்பாதுரை கூறுகையில்,''100 நாள் வேலை திட்ட புத்தகத்தை புஷ்பராணி புதுப்பிக்காததால், வேறு பெயரில் பணம் எடுத்து, மண்டலம் அலுவலரிடம் வைக்கப்பட்டுள்ளது. புத்தகம் சமர்ப்பித்தவுடன், உரியவரிடம் எழுதி வாங்கி பணம் ஒப்படைக்கப்படும்,'' என்றார்.
மேற்பார்வையாளர் மஞ்சு மனோகரன் கூறுகையில், ''தாமதமாக பணம் வந்ததால், வாங்கியவர்கள் செலவு செய்துள்ளனர். ஆன்லைன் பணம் பரிவர்த்தனை என்பதால் எனக்கு தெரியவில்லை. தற்போது பணம் தயாராக உள்ளது. சம்பந்தப்பட்டவர் பெற்று கொள்ளலாம். காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் அளித்துள்ளனர்,'' என்றார்.

