/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியினருக்கு பசுமை திறன் பயிற்சி துவக்கம்
/
பழங்குடியினருக்கு பசுமை திறன் பயிற்சி துவக்கம்
ADDED : டிச 05, 2025 08:38 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே கூவமூலா பழங்குடியின கிராமத்தில், பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கப்பட்டது.
சி.பி.ஆர்., சுற்று சூழல் மையம், மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான திட்டம் மூலம், பழங்குடியின மக்களுக்கு,'பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி' துவக்கப்பட்டது.
சி.பி.ஆர்., ஒருங்கிணைப்பாளர் குமாரவேல் வரவேற்று பேசுகையில்,''பழங்குடியின மக்கள் மத்தியில் சுய வேலை, வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில், பசுமை சார்ந்த தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. உணவு மற்றும் உதவி தொகை வழங்கப்பட்டு, பயிற்சி வழங்கும் நிலையில் அதனை பயன்படுத்தி கொள்ள முன்வரவேண்டும்,''என்றார்.
தேவாலா வனச்சரகர் சஞ்சீவி துவக்கி வைத்து பேசுகையில்,''இயற்கை சார்ந்து வாழும் பழங்குடியின மக்கள் மத்தியில் இயற்கையை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சூழல் சார்ந்து, தொழிற்பயிற்சி வழங்கும் நிலையில், அதனை பயன்படுத்தி தங்கள் வாழ்வில் முன்னேற பழங்குடியின மக்கள் முன் வர வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம், வனவர் சுரேஷ்குமார், பயிற்சியாளர்கள் ரமணி, ஹரிதா மற்றும் பழங்குடியின மக்கள் பங்கேற்றனர்.

